ஆசையே துன்பத்திற்கு காரணம் - உதயா

ஆசையே துன்பத்திற்கு காரணம்!!!!

புழுவிற்கு
மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன்
ஆசைப்பட்டான்,

மீனுக்கு சிக்கியது புழு,
மனிதனுக்கு சிக்கியது மீன் ,
புழுவிற்கு ..?

ஆனாலும்
காத்திருந்தது புழு...
மனிதன் மண்ணுக்குள்
வரும் வரை

எல்லாத் தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்.

எழுதியவர் : udayakumar (16-Jan-15, 9:38 pm)
பார்வை : 291

மேலே