அழகே நீயும் என்னை _சே பா
அழகே! நீயும் என்னை...
!!!வெளஞ்சு வெடிச்ச
பருத்தியா நீயும்,
வெளிச்சத்தில கண்ண
உருத்துரியே!
!!!வெளிச்சம் தொலைத்த
இருளில நீயும்,
விண்மீனாய் வந்து
ஜொலிக்கிறேயே!
!!!புளிக்க வச்ச
தயிரா என்ன,
மத்துகொண்டு
கடையிறேயே!
!!!உச்சி முதல் பாதம் வரை
உன் நெனப்ப அள்ளித்
தெளிக்கிறேயே!
!!!கண்ணுல விழுந்த
தூசியா நீயும்,
இதயத்துள வந்து
உருத்துறேயே!
!!!உன் ஓரவிழி
பார்வையில என்ன,
ஒதுக்கி நீயும்
தல்லுறேயே!
!!!சாதம் உண்ணும்
தட்டுல நீயும்,
தாமரையா வந்து
முளைக்கிறேயே!
!!!கருவிழியில் விழுந்த
உன் பின்பம்,
என் இதயத்தில் கருகொண்டு வளர்வது ஏனோ!
இதுதான் காதலோ!
இல்ல
இதுவும் காதலோ!
தீராத உன் நினைவுடன்...