தாய்மை
பெண்மையின் மிகச்சிறந்த
காவியம் தாய்மை
கடவுள் பெண்ணுக்கு வரைந்த
ஓவியம் இந்த தாய்மை
இருள் நிறைந்த புனித தளத்தில்
உருவாகும் சின்ன சித்திரத்தை
வெளிச்சத்திற்கு காட்டும் தெய்வம்
இந்த தாய்மை
தன் ரத்தத்தை பாலாக்கி தன் மனம் மகிழ
குழந்தையின் பசி ஆற்றுவாள்......
தன் குழந்தையின் அழகிய புன்சிரிப்பில் '
தன் பசி மறப்பாள்
நிலவை உறவாக்கி தன் மடியை
தொட்டிலாக்கி கண் உறங்கும்
தன் குழந்தையை தன்
மார்போடு அணைத்து ரசிப்பாள்
தன் உறக்கம் மறந்து
தன் இனிய மழலையை நுட்பமாய்
தொட்டு ரசிப்பாள் ..............
தன் வாழ்க்கை மறந்து தன்
மழலை வாழ்வை வடிவமைக்கும்
தெய்வம் இந்த தாய்மை
ஒவ்வொரு இல்லத்திலும் வாழும்
உயிருள்ள தெய்வம் தாய்