சுகாதாரமே வாழ்வாதாரம்
மலைப்போல் குவிக்கும் குப்பைகளால்
அழையா விருந்தாளி ஆகின்றது; மலேரியா !
ஆங்காங்கே கழிக்கும் மலங்களால்
வாழ்வாங்கு வாழ்கின்றது; டெங்கு……….!
நீராதார நீச்சுகளால் – ஊரில்
ஜோராய் பரவுகின்றது; காலரா………!
சுகாதாரமற்ற சிற்றுண்டிகளால்- உடம்பை
பாடாய் படுத்துது ஃடைப்பாய்டு……..!
எதையும் முளையிலேயே கிள்ள வேண்டும்
முடிவில் பயன்களை அள்ள வேண்டும்
வருவது வரட்டும் என்றிருந்து விட்டால்
வாழ்க்கை வசீகரமிழக்கும் வாழ்நாள் முழுதும் !