பெண் என்பவள்

"அரிது அரிது மானிடனாய் பிறத்தலரிது
அதனினும் மங்கையராய் பிறத்தல் மிக மிக அரிது". எனவே பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.அப்படிப்பட்ட பெண்கள் ஏன் இன்னும் இழிநிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதை ஆராயவேண்டும்.அவர்களின் அந்நிலை மாற உதவவேண்டும் .
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்றது அன்றைய நிலை ,ஆனால், இன்று "ஆணுக்கு நிகர் என்ற போதிலும் எல்லா இடங்களிலும் பின்பற்றபடுகிறதா என்றால் அது வினாவே ??

சாதனைகளும் சரித்திரங்களும் படைக்கும் பல பெண்களும் அதை முழு சுதந்திரத்தோடும்,உரிமையோடும் தான் செய்கிறார்களா?? நாடு விட்டு நாடு வந்து நயம்பட தூது உரைத்த ஓளவை, விண்வெளி சென்று தன்இன்னுயிர் நீத்த சாவ்லா ,துணையின்றி வாதமிட்டு வரலாறு போற்றும்படி வாழும் கண்ணகி முதல் அனைவரும் இதை முழு சுதந்திரத்தோடு தான் செய்திருப்பார்களா என்றால் சற்று யோசிக்க வேண்டியதே.?ஒரு பெண் ஒரே நேரத்தில் தாயாகவும் ,மகளாகவும், தோழியாகவும் இன்னும் எண்ணிலடங்கா வேலைகளை செய்கிறாள் .

"பட்டங்கள் ஆழ்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ".இருப்பினும் வரதட்சணை போர்வைக்குள் வாடி வதங்கும் பெண்களின் நிலையோ ஏராளம். முதுகுடி மகளிர் வீரம் குறித்து "மூதில் முல்லை "கூறுவது யாதெனில் "அடவேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் மடவரால் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று".பெண் என்பவள் தோன்றாவிடில், அன்பு என்பதற்கே அர்த்தமில்லாமலிருக்கும் என்கிறான் ஒரு கவிஞன்.
இத்துனை பெருமைக்கொண்ட பெண்ணே!!
உன்னை,
வீரமாக இருக்கவேண்டாம் என்று கூறவில்லை ,
விவேகத்தை இழந்துவிடாதே !!
அடிமையாக இருஎன்று கூறவில்லை ,
அகங்காரம் கொள்ளாதே!!

அன்பில் அன்னை தெரசாவாய் ,
ஆட்சியில் இந்திராவாய் ,
வீரத்தில் ஜான்சியாய்,
வெற்றியில் சுனிதாவாய் வாழ ,
உன்னில்உள்ள உன்னைத்தேடு ,
தன்னம்பிக்கையை தட்டிஎழுப்பு
தரணியும் தலைவணங்கும் ...
சமூகமே !!
இதற்கு நீ வழிவிட்டுப்பார் ...வரிசைப்படுத்த உன்னால் இயலாது ...

எழுதியவர் : sudarvizhi (20-Jan-15, 5:31 pm)
Tanglish : pen enpaval
பார்வை : 3710

சிறந்த கட்டுரைகள்

மேலே