பிள்ளையின் ஆசை

ஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் போது தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார்
தந்தை.

மனைவி : "என்னங்க நீங்க ... இந்த
சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு இந்த
பாடுபடுறீங்க ... அவன் எதை கேட்கிறானோ அதை வாங்கிக்
கொடுங்களேன்."

கணவன் : "வேணாம்டி ... விவரம் தெரியாம
பேசாத."

மனைவி : "என்ன விவரம் தெரியணும்... பேசாம
அவன் கேட்கிறதை வாங்கிக் கொடுங்க.ஒரு கொஞ்ச நேரம் பிள்ளைய பார்த்துக்க முடியல... இதுல வாய் மட்டும்..."

கணவன் : "அடியே... அவன் 'எனக்கு இந்த
அம்மா வேண்டாம் .. அதோ அங்கே மஞ்சள் கலர்
டிரஸ் போட்டுக்கிட்டு உக்காந்துருக்காங்களே!
அந்த அம்மாவை வாங்கிக்
கொடுங்க'ன்னு சொல்றாண்டி." அவன்
ஆசைய நிறைவேத்தட்டுமா?

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (20-Jan-15, 11:56 pm)
Tanglish : pillayin aasai
பார்வை : 3397

சிறந்த நகைச்சுவைகள்

மேலே