அப்பாவின் சுமை
அக்காவிற்கு வாங்கி கொடுத்த ஐம்பது சவரன் ஒட்டிகை...
அண்ணா கல்லூரிக்கு போக , வாங்கிய புது பைக்....
மாப்பிள்ளைக்கு சீராக வாங்கிய புது கார்...
அம்மாவிற்கு திருமண பரிசாக வாங்கிய வைரமூக்குத்தி....
எனக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்த புது சைக்கில்.....
இத்தனையையும் கிண்டலாக கர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கும், முப்பது வருடம் முன் வாங்கிய போர்டிகோவில் நிற்கும் அப்பாவின் பழைய ஸ்கூட்டர்.....
எங்கள் பாரத்தை தனியாக சுமக்கும் அப்பாவை, ஆண்டுகளாக சுமக்கும் ஸ்கூடர் அல்லவா
கர்வம் இருக்கத்தானே செய்யும்.....