தோழி
பெண்ணானக்கோடி பெண் அவள்
என் நட்பென்ற வரிகளால்
என் தோழி என்று எழுதப்பட்டாள்
என் அகவிளக்கம் அனைத்தும் அறிந்து
நான் பேசிய புதுமொழி ஆனாள்
என் அன்பில் அன்னை ஆனாள்
உயர் பண்பில் என் தந்தையும் ஆனாள்
அன்பென்ற வாள் ஏந்தி
என் தோல்விகளை வெற்றி கொண்டாள்
வெற்றியின் போது என் பெயரை அறிமுகப்படுத்தி அதில்
அவள் மறைமுகம் ஆனாள்
கண்ணீர் சிந்த காலம் வந்தால்
கண்ணீர் துடைக்க கைகள் தந்தாள்
வாழ்க்கை என்னிடம் சொல்ல வந்ததை
நான் அவளிடம்
கற்றுக்கொண்டேன்
எங்கள் நட்பு எண்ணும் கடல் தேசம் எங்கள் அன்பின் வசம் அடங்குவதால்