நீயும் நானும் - நட்பும்

காட்டுப் பாதை
தாண்டி கல்வி
கற்கப் போனாலும்
நம் இருவருக்குள்ளும்
வேற்று பார்வை
இல்லா வெள்ளை மனசுகள் ...
நீயும் நானும் - நட்பும் .

உன் கைபிடித்து
நடக்கையிலும் பல
கதைகள் பேசி நடக்கையிலும்
நம் இருவருக்குள்ளும்
வேற்று பார்வை
இல்லா வெள்ளை மனசுகள் ...
நீயும் நானும் - நட்பும் .

உன் கூந்தல் வாடையிலும்
விழியன் ரசிப்பிலும்
விரலின் தொடுகையிலும்
நம் இருவருக்குள்ளும்
வேற்று பார்வை
இல்லா வெள்ளை மனசுகள் ...
நீயும் நானும் - நட்பும் .

நட்பு மட்டுமே நம்
அன்பின் ஆயுதமாய் கொண்டு
நீ சிந்தும் புன்னகையை ரசித்தாலும்
நம் இருவருக்குள்ளும்
வேற்று பார்வை
இல்லா வெள்ளை மனசுகள் ...
நீயும் நானும் - நட்பும் .

அந்திப் பொழுது வரை
அருகருகே அமர்ந்து
அன்பினைப் பரிமாறிக் கொண்டாலும்
நம் இருவருக்குள்ளும்
வேற்று பார்வை
இல்லா வெள்ளை மனசுகள் ...
நீயும் நானும் - நட்பும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jan-15, 4:11 pm)
பார்வை : 331

மேலே