பிறக்க ஆசைபடுகிறேன்

விழி மூடும் பார்வையில்
ஒளி வீசும் வண்ணமாக நீ

வழிகள் எல்லாம் பசுமை
அதில் வலுக்கிவிடபட்ட உன் பார்வைகள்
ஓரம் கட்டிய நீர்குமிழ்கள்
உன் சிரிப்புக்காக வெடிக்க காத்துயிருக்கிறது ...

நேரம் பார்க்காமல் நிலவும் வருகிறது
உன் நிழலை தேட

சாலை எங்கும் புல்வெளிகள்
அதில் நீ போவதால்
பூக்கின்ற பூ வனங்கள்

மேளம் மிடும் வானமும்
பால் மழையில் நீ குளிக்க...

தோகை வண்ணமும் தோற்று போகும்
சேலை அணிந்து நீ நடப்பதால் ...

நீ பார்கின்ற நேரத்தில்
ஆயிரம் மின்னல்கள் என் இதயத்தில்
அதன் வெளிச்சத்தில்
பல கோடி வானவில்கள் தோன்றி மறைகிறது ...,

தேடப்படாத கனவுகள் எல்லாம்
தேடி வருகிறது
உன் நினைவை அழகுபடுத்த

கோர்க்க படாத வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டி நிற்கிறது
உன் கவிதையை சொல்ல

செதுக்கப்பட்ட சிலைகள் எல்லாம்
மீண்டும் கல்லாகவே மாறுகிறது
அழகே நீ பிறந்ததால்

கொடுக்கப்பட்ட இவ்வுலகில்
உன்னை வர்ணிக்க நேரமில்லை
அழகே மீண்டும் பிறக்க
ஆசைபடுகிறேன் ..,
உன்னை வர்ணிப்பதை தொடர ...

இல்லை என்றால் ,
இந்த ஜக உலகத்தையும் அழித்துவிடுவேன்
உனக்காக ...

எழுதியவர் : காந்தி (21-Jan-15, 12:50 pm)
பார்வை : 142

மேலே