நட்பின் பிரிவு

நான் முதன்முதலாக
கல்வி கற்க - இங்கே
காலடி எடுத்துவைத்த -நாளில்
வளம் செழிக்க பணம்கொண்டு
வரவில்லை -மனம் முழுக்க
ஆசையை சுமந்து வந்தேன் !
நட்பு என்ற கரம் கொடுத்து
நன்மை பல செய்து
கைகுலுக்கி பாராட்டி - சில நேரம்
கைதூக்கி விட்ட - நீ
தேர்வு பல முடிந்து
தேசம் பல இடம் மாறி
எங்கோ ஓர் இடத்தில் இருபாய்!
உன்னை பிரிந்த நாட்கள்
ஒரு யுகமாய் உணர்ந்தேன்
இதயம் அழுகிறது !
கண்ணீர் வடிகிறது
காலத்தின் பிடியில்
சூழ்நிலையின் மடியில்
என்றாவது ஒரு நாள் - நாம்
எங்காவது சந்தித்தால்
நினைதிருப்பாயா - இல்லை
நினைவின்றி மறந்திருப்பாயா - இது
பிரிவையும் சந்திப்பையும் - படைத்த
கடவுளுக்கே வெளிச்சம் .

எழுதியவர் : ஸ்ரீ நந்தினி (21-Jan-15, 10:23 am)
Tanglish : natpin pirivu
பார்வை : 353

மேலே