ஏழையன்ன என்னம்மா

நெல்லு வயலுல புல்லு மொளைக்குது
புல்லு மொளைக்குது ..புல்லு மொளைக்குது
நெல்லு மொளைக்கலையே ஆத்தா நெல்லு மொளைக்கலையே.....

ராக்காயி ஆச்சியின் ராகத்தை இடைமறித்தாள் பொம்மி "என்னாத்தோ பாட்டெல்லாம் பலமா இருக்கு.."

"யாரது பொம்மியா..ஏது இந்தபக்கம் " கண்ணை குருக்கிகொன்ன்டே கேட்டாள்.

"காட்டுல களை வெட்ட ஆளு சொல்ல வந்தேன்.யாரும் வர்ற மாதிரி தெரியல...நாமலே எறங்கிட வேண்டியதுதான்.."ஒருவித சலிப்புடன் சொன்னால்.

"நீ சும்மாதானே இருக்கே கொஞ்சம் ஒத்தாசைக்கு காட்டு பக்கம் வரலாமில்ல"என்று பொம்மி தொடர்ந்தாள்..

"பாவம் நீயும் ரெண்டு பொட்ட புள்ளைகல வச்சிக்கிட்டு ஒத்த ஆளா கஷ்டப்பட்டு கிட்டு இருக்க.உம்புருசன் குடிச்சி குடிச்சே கொடல் வெந்து உன்ன அனாதைய விட்டுட்டு போய் சேர்ந்துட்டான் ....என்ன பண்றது எல்லாம் விதி "என்று உச்சு கொட்டினால் ராக்காயி ஆச்சி ..

"புள்ளைகள பள்ளி கூடத்துக்கு அனுப்புறல்ல ,காட்டு வேலைக்கு ஆளு இல்லேன்னு கூட்டிட்டு போய்டபோற" பொம்மியின் குட்டி பெண்ணின் கன்னத்தை வருடிகொண்டே கேட்டாள் .

"ஆத்தா நான் உசுரு வாழ்றதே எம் பொன்னுகளுக்குதான்,படிக்க வைக்காம விடுவேனா...இதோ இவ மூத்தவ அஞ்சாவது,இவ குட்டி பொண்ணு ரெண்டாவது.படிக்கிறா.."என்று விட்டுகொடுக்காமல் பேசினாள்

"அதெல்லாம் விடு நீ காட்டுக்கு களை வெட்ட வரியா இல்லையா...? கத்த

"சரி சரி போ வர்றேன் ..என்ன பண்றது நம்மள மாதிரி ஏழைகளுக்கு யாரு ஒத்தாசை பண்ணுவா நாமளேதான் எல்லாத்தையும் செய்யணும்...."சலிப்புடன் சொன்னால் ஆச்சி

சட்டென்று குறுக்கிட்ட பொம்மியின் குட்டிப்பெண் தன அம்மாவின் முந்தானையை பிடித்தவாறே "ஏழையன்ன என்னம்மா?"என்றாள்

"ம்ம் ..உடுத்த ஒரு நல்ல துணிகூட இல்லாம கிழிஞ்ச பாவாட சட்டை போட்டு இருக்கோமில்ல , அதுக்கு பேருதான் ஏழை "என்னம்மா என்று தா அம்மாவை ஏறிட்டாள் பொம்மியின் மூத்த பெண்.

"அப்போ நம்ம வீட்டுக்கு பக்கத்துல மாடி வீட்டு அக்கா இருக்காங்கல்ல , அவங்களுக்கு துணியே இல்லாம ஒரு பாப்பா பொறந்துச்சே..அப்போ அவங்க நம்மள விட ஏழையா..."என்றாள் சிரித்துக்கொண்டே அந்த குட்டி பெண்.

எழுதியவர் : பெ.சு.ஆறுமுகம் (ஒபிலி) (22-Jan-15, 11:40 pm)
சேர்த்தது : பெசுஆறுமுகம்
பார்வை : 265

மேலே