தமிழாட்சி

தமிழ்த்தாயே! நஞ்சை பெருமை
தஞ்சைக்கு பழையது,
புதியது - தமிழ்ப்புரட்சி
ஆம் உன்புரட்சி!

உன் அரவணைப்பின் அருமையில்
தொன்மையின் பெருமையில்
நீதிநெறி தவறா மன்னர்க்கு
செழித்தோங்கியது தமிழ்ப்பாசம்!

தற்போது? அரசுகளா இவை?
அமைச்சர்கள் என்ற போர்வையில்
அராஜகம் - உனை உதவிக்கழைப்பது
ஓட்டுக்கள் சிதறாதிருக்க மட்டும்!

பொதுக்கூட்ட பதாகைகளில்
இடத்திற்குகந்த கடவுள் அவதாரம்!
முச்சந்திகளில் மக்கள்சிரிக்க
முணுமுணுக்கும் பக்தர்கூட்டம்!

எங்கள் உணர்வுக்கு வடிவுதந்து
தாயென போற்றும் மொழிக்கு
லஞ்சப்பேய் தாயென்றால்
நெஞ்சுக்கு தாளமுடியவில்லை!

தாயே உன் உணர்வும் சிறப்பும்
எங்கள் உயிரோடு ஒன்றியவை
உன்குடையின்கீழ் அணிசேர்வது
தமிழுலகில் பாராட்டுமழைக்காக!

இம்மண்ணிற்கு உன்னாட்சிதான்
தேவைதாயே - அழகு தேவதையே
இதோ நடக்கிறது தஞ்சையில்
உனக்கொரு முடிசூட்டும் விழா!

எங்கள் மகாராணியே
உன்மேன்மை உயர
வாழிய வாழியவே!!

- சூர்யபுத்திரன் (1994)
(Dr.சூர்யா)

எழுதியவர் : Dr CR சூரியகுமார் (23-Jan-15, 10:34 am)
பார்வை : 716

மேலே