உயர்வு என்றும் பணியும்
சில்லரை நாணயங்கள்
கல கலப்பதைப் போல்
பெறுமதியான தாள் நாணயங்கள்
கல கலப்பதில்லை
குறைகுட நீர் சல சலத்து
துள்ளி எழுவதைப் போல்
நிரைகுட நீர் சல சலப்பின்றி
அமைதியாய்க் கிடக்கும்
கடலலை கரையில்தான்
மூர்க்கம் காட்டும்
ஆழ் கடலினிலே அலையின்றி
சாந்தம் காட்டும்
தன் குறை மறைக்க சத்தமிட்டு
குரல் உயர்த்தி மறைப்பான்
பண்பின் இருப்பிடங்கள்
சத்தமின்றி பண்பைக் காப்பான்

