வாழ்க்கையின் அசைவு
என்வாழ்வில் உயர்வேன்
ஏற்றம்பல அடைவேன்
துன்பம் தொலைத்திடுவேன்
துயரம் அதை மறப்பேன்
என் முக வரிகளில்
எனக்கான முகவரிகள்
அதற்கான தேவை உணர்ந்தேன்
காலம் அதன் கைக்குட்டை
கண்ணீர் துடைத்து போனாலும்
கருகிய இதயங்கள் தினம்
தேடிடும் உதயங்கள்
என மனம் துடித்தாலும்
நம்மை கேட்காமல்
அசையும் புவி போல
வாழ்க்கையும் அசைகிறது
பல வேளைகளில்-நம்
கைகளையும் தாண்டி
புரியாத விதைகளாய் .