நிச்சயம் முதல் திருமணம் வரை

அவன் :

பெண் பார்க்க வந்த போதே
என் இதயத்தை எடுத்துக்கொண்டாய்
அதனாலென்ன
திருமணத்தின் போது திருப்பி கொடு
உன் இதயத்தை


அவள் :

என் கழுத்து
காத்து கிடக்கிறது
உன் தாலிக்காக
ஏனென்றால்
அது அதற்காகவே படைக்கப்பட்டது

அவள் :

பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்ட
லைலா - நான்
மஜ்னு - நீ

அவன் :

உங்கள் வீட்டில் கொடுத்த
உன் புகைப்படதிடம் கேள்
அது சொல்லும் -இது
நிச்சயிக்கப்பட்ட திருமணமல்ல
காதல் திருமணமென்று


அவன் :

உன் மகிழ்ச்சியின் நீளத்திற்கும்
அழகின் ஆழத்திற்கும்
ஆண்டவனால் அனுப்பப்பட்டவன்
நான்

அவள் :

உன் தலை கோதவே
நான்
விரல் வளர்த்தேன்

எழுதியவர் : பா . மணி வண்ணன் (24-Jan-15, 1:22 pm)
பார்வை : 66

மேலே