கண்ட நாள் முதல்

என் விழிகளில் அவனது பிம்பம்
பதியக் கண்டேன்...
அவன் கனி மொழிகளும் கவிதையென
ஒலிக்கக் கேட்டேன்..
அவன் விழி அசைவுகளுக்கு என் மனம்
செவி சாய்க்கக் கேட்டேன்..
பனிக்காற்று பட்டு பூத்த புது பூ போல்
புன்னகித்துப் போனேன் காரணமின்றி
கிடைத்த அவனது சந்திபினால்...