Sathya Sakthi1 - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Sathya Sakthi1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 22 |
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முப்படைகளையும் சேர்ந்த வீராங்கனைகள் குடியரசு தின அணிவகுப்பில் , கேப்டன் திவ்யா தலைமையில் வீறு நடை போட்டுச்செல்லும் காட்சி. இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமிதம் சேர்க்கும் நிகழ்வு. இந்தியர் அனைவராலும் கொண்டாடப்படவேண்டிய நிகழ்வு.
பெண்மை போற்றுவோம்! பெண்ணுரிமை மதிப்போம்!
வண்ண வண்ண கடிதங்களில்
என் பாசம் சொல்ல நினைக்கிறேன் ...
சின்ன சின்ன விழித் தூரல்களில்
என் அன்பைக் காட்ட விழைகிறேன்..
பார்க்கும் பக்கம் எங்கெங்கிலும் உன்
பிம்பம் தோன்றக் காண்கிறேன்...
புது கவிதை!
சின்னதாய் அவன் சிரிக்கையில்
சிந்ந்துதே ஒரு பூ மழை!
புன்னகை நான் பூக்கையில்
வீசுதே அவன் வாசனை!
அவன் சிந்திய விழி நீரிலே
என் ஆயுளின் தாகம் தீருதே!
அவன் பார்வையின் ஒளி நீளத்தில்
என் வாழ்க்கையே மெல்ல ஒளிருதே!
மௌனமாய் பலவார்த்தைகள்
பேசியே நான் போகிறேன்!
புல்வெளி மீதினில் நான் போகிற பாதையில்
கால்தடம் நான்கென பதியவே நான் பார்க்கிறேன்!
நிமிர்ந்து நான் பார்க்கையில்
நிலவென அவன் தெரிகிறான்!
தலை குனிந்து நான் நடக்கையில்
என் நிழலென அவன் இருக்கிறான்!
தீயென என் கோ (...)
வெண்மதிபோல் நீயும் ,
நீலப் புவி போல் நானும்
உன்னைச் சேரவேண்டும் என்றே
சுற்றி வருகிறேன்!
உன் இரவுகளுக்கு ஒளியுட்டவே
ஒளிர விரும்ம்புகிறேன் ..
உன் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தேன்
நீ என்றாவது ஏற்றுக்கொள்வாய்
என்ற எதிர்பார்ப்பில் ..
என் மனம் உன் நினைவுகளோடு
போட்டியிட வலிமையின்றி
ஏக்கங்களோடு தினம் தினம்
இறக்கின்றது .
.
சுகமான சுமைதான்
என்றாலும் நீ எனதில்லை
உன்னைப்பற்றிய நினைவு மட்டுமே
எனது என்னும்போதுதான்
என் மனக்கோட்டையில்
வீசிய சூறாவளியின் சீற்றம் தெரிந்தது.
அனைத்தும் அடித்துச் சென்ற போதிலும்
எஞ்சிய மணற்கற்களை சேர்ப்பது போல
சேர்க்கிறேன் நீ பேசிய வார்த்தைகளையும்
உன் நினைவுகளையும் ..
கண் விழிக்கும் போதெல்லாம்
உன் பிம்பத்தைக் காட்டுகிறது
என் மனது ..
ஒரு முறையாவது நிஜமாய்
நீ வருவாயென நினைத்து..
கவ
காலை முதல் மாலை
வரை காத்திருந்து..
தொலை பேசியில் தோன்றிய
ஒலியின் முகம் காண ..
பார்ப்பவை எல்லாம்
அவன் உருவாய் எண்ணி ..
அவனைக் கண்டதும் தோன்றிய
மாயங்கள் கேளாயோ!
என் விழி இரண்டும் இவ்வுலகைக்
காண மறந்ததோ!
அல்லது அவனையே தன்
உலகமென கண்டு கொண்டதோ !
இவ்வுலகத்தின் ஒலிகள்
எல்லாம் மௌனமானதோ!
அல்லது என் சேவிகள் இவன்
மொழிகளை மட்டும் கேட்டக்க விளைந்ததோ !
பார்வையில் மட்டுமே பேசி
புன்னகையில் மட்டுமே மொழிந்தவள்
அந்தி மாலையில் மறைந்து போன
அவன் நிழலுக்கு நன்றி சொல்லி
தானே அவனது நிழலென நின்றனளே !
அன்பெனும் கவிதையின்
உயிர்க்கரு அவள்...
சுமைகளையும்
சுகமாய் ஏற்பவள்..
என் தவறுகளில் கூட
தண்மையாய் இருக்க
எங்குதான் கற்றுக்கொண்டளோ !
என் பார்வையில் அவள்
சிப்பியாய் சிறக்கிறாள்
பெற்றவள் அவளாயினும்
அவள் முத்துக்கள்
மாலையாவது பிறர்
கழுத்தில் அல்லவா!
மௌனமே வார்த்தையாய்!!
புன்னகையே மொழியாய்!!!
அவன் ஒரு வரி பேச்சினை
நான் கேட்டது பலமுறை...
அவன் இருவிழி பார்த்ததில்
என் பரவசம் பலவிதம்...
சில வார்த்தைகள்
அவனிடம் பேசவே
பலநாட்களாய் ஒத்திகை
நான் பார்க்கிறேன்..
அவனை பார்க்கின்ற வேளையில்
மௌனமே மொழியென
மாறிய மாயத்தை
என்னென்று நான் சொல்வேன்..
என் காதலின் கீதத்தை
இசைக்கின்ற ஒரு மொழி
புன்னகை என்பதை
உணர்ந்த நாள் இன்றல்லவா..
புது கவிதை!
சின்னதாய் அவன் சிரிக்கையில்
சிந்ந்துதே ஒரு பூ மழை!
புன்னகை நான் பூக்கையில்
வீசுதே அவன் வாசனை!
அவன் சிந்திய விழி நீரிலே
என் ஆயுளின் தாகம் தீருதே!
அவன் பார்வையின் ஒளி நீளத்தில்
என் வாழ்க்கையே மெல்ல ஒளிருதே!
மௌனமாய் பலவார்த்தைகள்
பேசியே நான் போகிறேன்!
புல்வெளி மீதினில் நான் போகிற பாதையில்
கால்தடம் நான்கென பதியவே நான் பார்க்கிறேன்!
நிமிர்ந்து நான் பார்க்கையில்
நிலவென அவன் தெரிகிறான்!
தலை குனிந்து நான் நடக்கையில்
என் நிழலென அவன் இருக்கிறான்!
தீயென என் கோ (...)
தேடல்!
எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலே
பலர் தங்கள் தேடல்களில் தொலைகின்றனர்
பிறர் தேடல்களை தொடர்ந்தபடி !