புது கவிதை! சின்னதாய் அவன் சிரிக்கையில் சிந்ந்துதே ஒரு...
புது கவிதை!
சின்னதாய் அவன் சிரிக்கையில்
சிந்ந்துதே ஒரு பூ மழை!
புன்னகை நான் பூக்கையில்
வீசுதே அவன் வாசனை!
அவன் சிந்திய விழி நீரிலே
என் ஆயுளின் தாகம் தீருதே!
அவன் பார்வையின் ஒளி நீளத்தில்
என் வாழ்க்கையே மெல்ல ஒளிருதே!
மௌனமாய் பலவார்த்தைகள்
பேசியே நான் போகிறேன்!
புல்வெளி மீதினில் நான் போகிற பாதையில்
கால்தடம் நான்கென பதியவே நான் பார்க்கிறேன்!
நிமிர்ந்து நான் பார்க்கையில்
நிலவென அவன் தெரிகிறான்!
தலை குனிந்து நான் நடக்கையில்
என் நிழலென அவன் இருக்கிறான்!
தீயென என் கோபங்கள்
அவன் விளக்கென ஒளிர்கிறான்
தோன்றிய ஒளியிலே
அவன் தூய்மையே நான் காண்கிறேன்!
அவன் காதலை ஒரு நூலென
சுற்றினான் என் உலகத்தை
என் கழுத்தினில் அசைந்ததே
அவன் மூச்சினில் செய்த முடிச்ச்சுகள்!
நான் ஏற்கிறேன் அவன் நிஜங்களை
நேசிக்கிறேன் அவன் நிழல்களை!
நான் நானில்லை
அவன் அவனில்லை
நாங்கள் நாமாகினோம்!
இருவரும் இயற்றிய
இந்த தொடர் கதை
ஒரு புது கவிதை!!!