மௌனமே வார்த்தையாய்!! புன்னகையே மொழியாய்!!! அவன் ஒரு வரி...
மௌனமே வார்த்தையாய்!!
புன்னகையே மொழியாய்!!!
அவன் ஒரு வரி பேச்சினை
நான் கேட்டது பலமுறை...
அவன் இருவிழி பார்த்ததில்
என் பரவசம் பலவிதம்...
சில வார்த்தைகள்
அவனிடம் பேசவே
பலநாட்களாய் ஒத்திகை
நான் பார்க்கிறேன்..
அவனை பார்க்கின்ற வேளையில்
மௌனமே மொழியென
மாறிய மாயத்தை
என்னென்று நான் சொல்வேன்..
என் காதலின் கீதத்தை
இசைக்கின்ற ஒரு மொழி
புன்னகை என்பதை
உணர்ந்த நாள் இன்றல்லவா..