ஒரு காதலியின் தூது
உன் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தேன்
நீ என்றாவது ஏற்றுக்கொள்வாய்
என்ற எதிர்பார்ப்பில் ..
என் மனம் உன் நினைவுகளோடு
போட்டியிட வலிமையின்றி
ஏக்கங்களோடு தினம் தினம்
இறக்கின்றது .
.
சுகமான சுமைதான்
என்றாலும் நீ எனதில்லை
உன்னைப்பற்றிய நினைவு மட்டுமே
எனது என்னும்போதுதான்
என் மனக்கோட்டையில்
வீசிய சூறாவளியின் சீற்றம் தெரிந்தது.
அனைத்தும் அடித்துச் சென்ற போதிலும்
எஞ்சிய மணற்கற்களை சேர்ப்பது போல
சேர்க்கிறேன் நீ பேசிய வார்த்தைகளையும்
உன் நினைவுகளையும் ..
கண் விழிக்கும் போதெல்லாம்
உன் பிம்பத்தைக் காட்டுகிறது
என் மனது ..
ஒரு முறையாவது நிஜமாய்
நீ வருவாயென நினைத்து..
கவிதைகளின் வாசகங்களில் மட்டுமல்ல
என் கண்ணீரிலும் நீ உள்ளதை
உணரும் காலமும்
என் வாழ் நாட்களில் வருமா ..
உன் பேச்சுக்களில் நான்
என் வார்த்தைகளை மறப்பதை
உன் மனம் அறியவில்லையா ..
உன்னை மறவாதவளாய் நானும்
என்னை ஏற்க்காதவனாய் நீயும்
இந்த நிலைமைக்கு காரணம் தான் என்ன ..
மனமில்லாமல் மறப்பதும்
உன் நினைவோடு போராடி தோற்ப்பதும்
போர்க்களம் செல்லாத
வாள்வீச்சானது என் வாழ்வில் ..
சோகம் தீர்த்திட என்னவனாய்
நீ வருவாயென உன்னவளாய் காத்திருந்து
புன்னகைப்பூக்களை சிதறாமல்
சேமித்தேன் நீ வரும் வழி
எங்கும் உன்னை வரவேற்க .
நீ வரும் வழி பார்த்து விழி
ஏங்கி நின்றவளாய் விடை பெறுகிறேன் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
