அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பெனும் கவிதையின்
உயிர்க்கரு அவள்...
சுமைகளையும்
சுகமாய் ஏற்பவள்..
என் தவறுகளில் கூட
தண்மையாய் இருக்க
எங்குதான் கற்றுக்கொண்டளோ !
என் பார்வையில் அவள்
சிப்பியாய் சிறக்கிறாள்
பெற்றவள் அவளாயினும்
அவள் முத்துக்கள்
மாலையாவது பிறர்
கழுத்தில் அல்லவா!