மழலைக்கு

நான் வாங்கிவரும்
ஒருமுழம் மல்லிகையாய்ப்
பூத்திருந்தே காத்திருந்தாள்...


உன்னை ஒப்பிட்டு
ஆபரணங்களை அவமதித்தாள்...
முன்பிருந்த அழகை கூட்டிக்கொண்டிருந்தாள்...

சில வேலை(ளை)களில்
மழலையானாள்.
சாம்பலை அதிகம் நேசித்தாள்...
சாப்பாட்டை இறக்குமதி செய்தாலும்
அதன் முழு ஊட்டத்தையும்
ஏற்றுமதி செய்தாள்....


அவள் உயிர் இரண்டாக
உற்பத்தியாவதை உணர்ந்தாள்...
உலகமே உனக்குள் என
உறைந்து போனாள்....
உதைக்க ஆரம்பிக்கும்போதே
' அம்மா ' என்று சொல்லிக்கொடுத்தாள்...
தூசியைப்போல் உயிர்
அலைவதை ஊகித்தாள்...



இவ்வளவுதான்!
இவ்வளவுதான்!
என்னால் பெற இயன்றது....

ஏனோ!
இந்தியாவில்
உலக உருண்டை
உழவு செய்யப்படுதலைகாண
அனுமதி மறுக்கப்படுவதால்தான்
என்னைப்போல் கணவன்மார்களின் இதயப்பாறை
இடிந்து போகாமல் இருக்கின்றது...

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (25-Jan-15, 5:45 pm)
Tanglish : malalaikku
பார்வை : 146

மேலே