சயன நேர பயணங்கள்
உன்னோடிருந்த அந்த சில மணித்துளிகளை தேடி...
என்னோடிருந்த கண்ணீர் துளிகள் புறப்பட்டன...
உன் நினைவெனும் நறுமணம் வரும் திசை நோக்கி...
தன் ஒற்றை சிறகை விரித்ததே என் விழி வண்டுகள்...
சயன நேரங்களில் சிறு பயணம் செய்ய விரும்பும் என் மனம்...
நாம் சென்ற பயண தூரங்களை அயனம் செய்கிறதே தினம்...
இரவு முழுவதும்...
கன்னத்தில் நான் எழுதிய காவியங்களை, காலையில் காற்று வந்து அழித்ததே...
என் எண்ணத்தின் புடைப்புகளை மீண்டும் நாளை புது காவியமாய் படைத்திட(வா)... (நீ)