மண் பயனுற வேண்டும் - கவிதை போட்டி

இனிய தோழமைகளே
"மண் பயனுற வேண்டும்" குடிலின் காலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
இந்த குடிலில் நால்வர் வசிக்கிறோம் . என் பெயர் நித்யா என்று எங்களில் ஒருத்தி எழுதி இருந்தாள்.
அதை கொஞ்சம் மாற்றி எங்கள் பெயர் நித்யா , வித்யா , கார்த்திகா , மேகலை என மாற்றிக் கொள்ளுங்கள் .

இந்த குடில் அழகானது . அன்பானது . ஆற்றல் கொண்டது . கற்கவும் , கற்பிக்கவும் இலக்கை கொண்டது .நாம் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தின் மேலும் , இந்திய தேசத்தின் மேலும் அளவில்லாத பற்று கொண்டது .

பூமியின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களே இல்லாத போது தமிழன் நிலத்தை ஐந்தாய் பிரித்து நாகரீகம் நடத்திக்கொண்டு இருந்தான் . உலகத்தின் எல்லா மொழிகளுக்கும் எப்போது பேச ஆரம்பிக்க பட்டது என வரலாறு இருக்கும் .தமிழை அதில் அடக்கவே முடியாது . ஆராய்ச்சியாளர்கள் 15000 வருடங்கள் என்கின்றனர் . சிலர் 20,000 வருடங்கள் என்று தெரிவிக்கன்றனர் .

ஒரு ஆராய்ச்சி... கற்கால மனிதன் குரல் பிரயோகங்களை ஒரு லட்சம் ஆண்டுகள் முன் முயற்சி செய்ய ஆரம்பித்தான் . இன்று உலகில் அத்துணை மொழிகளிலும் தமிழ் பிரயோகங்கள் பரவி கிடப்பதால் தமிழ்தான் அனைத்து மொழிகளின் மூலம் என்கிறது . "TAMIL IS THE MOTHER OF ALL LANGUAGES "

உலகம் உள்ளளவும் வாழும் மனிதர்களுக்கு, 2000 ஆண்டுகள் முன் வள்ளுவன் எப்படி வாழ வேண்டும் என எழுதி உள்ளான் என்றால் தமிழன் எவ்வளவு நாகரீகம் , அறிவியல் மற்றும் ஆற்றல் படைத்தவன் .

ஆதலால் இந்த மண் மேலும் பயனுற வேண்டும் மக்களே . அதற்காக பாடுபடுவோம் . எல்லோரும் வெவ்வேறு இலக்கில் இருந்தாலும் இது ஒரு பொது இலக்காக , முக்கிய இலக்காக எப்போதும் இருக்கட்டும் தோழைமைகளே.

அடுத்து பாரத தேசம் பழம் பெரும் தேசம் .இன்றைய நமது இந்திய நாடு . நமக்கு மிக எளிதாக கிடைக்கும் விஷயங்களின் அருமை நமக்கு எப்போதும் தெரிவதில்லை .
அதில் முக்கியமானது " இந்திய குடியுரிமை ".
நம்மில் எத்தனை பேர் அதன் பெருமையை , மகத்துவத்தை உணர்ந்திருக்கிறோம் . எந்த நாட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமை கூட பெற்றாலும் ( அதுவும் சில நாடுகளில் மட்டும்தான் முடியும் ) .. நீங்கள் இரண்டாம் பிரஜையாக (SECOND CITIZEN ) தான் நடத்தப் படுவீர்கள் , காணப் படுவீர்கள் .

இந்த நாடு நமக்கு எத்தனை கொடுத்திருக்கிறது என்பதை மறந்து நாம் பல வருடங்கள் ஆகி விட்டது . அல்லது நினைப்பதே இல்லை . என்னென்ன கொடுக்க வில்லை என்றால் உடனே ஒரு பட்டியல் நீட்டுவோம் .
இந்திய சமூகத்திற்கு நிகர் நியாமான , மனிதாபிமான , நாகரீக சமூகத்தை உலகெங்கும் காண்பது கடினமே .நம்மிடம் அது இருப்பதால் நமக்கு அதன் பெருமை தெரியவில்லை .

ஜப்பானில் பூகம்பம் வந்தபோது உலகம் மாதக் கணக்கில் பேசி கொண்டிருந்தது . நாம் குஜராத் பூகம்பத்தை ஒரு வாரத்தில் சமாளித்தோம் .
அமெரிக்காவில் புயல் , வெள்ளம் வந்தபோது நாடே அலறியது .நாம் வரலாறு காணாத மும்பை பெரு மழை , வெள்ளத்தை நான்கு நாட்களில் சமாளித்தோம் .
தமிழக கடற்கரயில் வந்த சுனாமியை 10,15 நாட்களுக்குள் சமாளித்தோம் .
இதில் அரசாங்கத்தின் பங்கு குறைவோ , நிறைவோ . தெரியாது . அது விவாதிக்க பட வேண்டிய விஷயம் .ஆனால் மக்கள் பங்கு எவ்வளவு பெரியது . மகத்தானது .

ஆதலால் இந்த மக்கள் வாழும் , நாம் வாழும் தேசத்திற்கு பாடுபடுவோம் .குறைகள் உண்டு . அந்த குறையை யார் நிவர்த்தி செய்வது . அடுத்த நாட்டு காரனா ? நாம்தானே அவைகளை எடுத்துரைக்க வேண்டும் , களைய வேண்டும் .
நாம் ஏழ்மையான , படிப்பறிவு இல்லாத , நவீனம் தெரியாத வீட்டில் பிறந்தோம் என்றால் நம் தாய் தந்தையை இழிவு படுத்துவோமா ? அல்லது அதை மாற்றுவோமா ?

இந்த சிந்தனைகளுடன் முடிக்கும் முன்
...இதை ஒட்டி ஒரு கவிதை போட்டி நடத்தாலாம் என விழைகிறோம் .
போட்டி பற்றிய அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் .

இப்படிக்கு
மண் பயனுற வேண்டும்

எழுதியவர் : மண் பயனுற வேண்டும் (26-Jan-15, 11:51 am)
Tanglish : man payanura vENtum
பார்வை : 737

சிறந்த கட்டுரைகள்

மேலே