கவிதையிலொட்டி
உனக்காக
அமைத்திருக்கும்
சிறப்பொலியில்
கைப்பேசி சினுங்க
நீ சொன்ன ஹலோவில்
விடிந்த காலை.
அதிகமாய்
உன் குரல் ருசிக்கவே
எதிர்பார்த்திருந்த
உணவு இடைவேளை.
கண்பருகி போக
மிச்ச உயிர்
தாங்கிப் பிடித்து
உதடு நெருங்க
உன் விரல் தடுத்த
ஒரு மாலை.
முத்தங்களால்
வெட்கம் கழற்றி
உயிர் சொட்ட
உனை ரசித்த
ஓரிரவு.
நமக்கிடையே
கடந்தகாலம்
அத்தனையும்
ஒட்டியிருக்கிறது
என் கவிதையில்.
--கனா காண்பவன்