இன்று நாள் எப்படி

இன்றைக்கு நாள்
எப்படிப் போகும்
என்று எழுந்ததும்
அறிந்து கொள்ள
எத்தனை ஜோதிடங்கள்..
இன்று அடுத்தவர் விஷயங்களில்
அனாவசியமாய் தலையிட வேண்டாம் என்றும்..
இன்று ..சந்திராஷ்டமம்
அதனால் பேச்சை குறைத்திட வேண்டுமென்றும்
இன்னொரு ராசிக்கு ..கொடுத்த கடன் திரும்பும் என்றும்..
பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை என்றும்..
இன்றைக்கு என்று சொல்லிடும் ஜோதிடங்கள்.
காலையில் கேட்ட பின்பே
நாளினைத் துவங்கிட வேண்டுமோ..?
ஒவ்வொரு நாளுமே..
செய்திட வேண்டிய பலவினை
ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ராசிக்கு
என அறிந்திட ஆர்வமும் வேண்டுமோ?
ஒவ்வொரு நாளுமே நேயமும் நேர்மையும்
அன்பும் அறனும் நயமும் நன்மையும்
இசைபட வாழ்ந்திட
நீங்கிடும் துன்பம் ..
வாழ்க்கையே இன்பம்..
இது நிரந்தர ஜோதிடம்!

எழுதியவர் : கருணா (28-Jan-15, 5:09 pm)
Tanglish : indru naal yeppati
பார்வை : 113

மேலே