நானும் சுயநலவாதி

நானும் சுயநலவாதி
நடக்கும் போது இடறிய கல்லை
பாதையிலே விட்டு வந்தேன்
உயிரற்ற கல்லை திட்டியவாறே....
சிதறிய சாதத்தையும்
உறவுகளுடன் உண்டது காக்கை
நானோ பதுக்கி வைத்து
பணம் பாா்க்க நினைத்தவன்....
தோ்வறையில் விடைகளை மறைத்தேன்
பணிமனையில் உண்மையை மறைத்தேன்..
நான், எனக்கு என்ற சுயநலம் கொண்டவனாய்....