என் நண்பனுக்காக
சங்கடங்கள் அனைத்தையும் சகித்துக்கொள்ளவே விரும்புகிறது மனது
உன்னிடம் மட்டும்
கட்டி அணைத்து அன்பை பொழிந்ததில்லைதான்
ஆயினும்....
விட்டுப்பிரிந்து விலகி நின்றதுமில்லை
என்றுமே ஒத்த கருத்துடன் இருந்ததுமில்லை
விருப்பங்களை தாண்டி விரும்ப மறந்ததும் இல்லை
சிதறிய கண்ணாடி சேராது என்ற உவமையை பொய்யாக்கியது...
நம் நட்பு!!!
ஆம்..
சிதறிய ஒவ்வொவொரு துகல்களிலும் நட்பே ஒளிர்வதால்!!
ஏனென்று தெரியவில்லை..
"நண்பன்"
என்ற வார்த்தையை கேட்டவுடன் இந்த பொல்லாத மனது
உன்னை மட்டுமே நினைக்கிறது!!
"நண்பன்"
என்ற வார்த்தைக்கு என் அகராதியில் ஒரே அர்த்தம்
"நீ" மட்டுமே!!
ஆண்டுகள் பல கடந்தாலும்...
யுகங்கள் பல தோன்றினாலும்...
மறையாத நம் நட்பின் சுவடுகளோடு..
என்றும் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்..
" நீ என் நண்பன்" என்று !!