+தனிமை+
மொழி தெரியா ஊரில்
வழி மறந்து போனால்
உணர்வது..
காதலுக்கு ஆதரவின்றி தவிக்கையில்
காதலனும் காதலியும்
உணர்வது..
திருவிழா முடிந்த மறுநாள்
உறவினர்கள் கிளம்பி சென்றதும்
வீட்டின் குழந்தை உணர்வது..
மழையின்றி வருமானமின்றி
ஆதரவின்றி தவிக்கும் எங்கள்
உழவன் உணர்வது..
எல்லாருமே இருந்தும்
ஒருவர் கூட புரிந்து கொள்ளாத வேளையில்
மனம் உணர்வது..
வகுப்பில் அனைவருமே தேர்ச்சிபெற
தோல்வியடைந்த ஒற்றை மாணவன்
உணர்வது..
ஊரே திருவிழாவில் மகிழ்ந்திருக்க
நோயாளி தாத்தாவின் இருமல்
உணர்த்துவது..
ரயிலின் நீண்ட தனித்த பயணத்தின்
நள்ளிரவு திடீர் விழிப்பு
உணர்த்துவது...
பார்வையற்ற கருத்தற்ற
பல கவிதைகள்
எழுத்தில் உணர்வது..