நண்பனுக்காக அவனோட நட்புக்காக

நண்பா!
கோட்டி புல்லு நாம அடிச்சாலும்
கோலிகுண்டத்தான் உடைச்சாலும்
சில்லி ஆடி நாம சிரிச்சாலும் - சொல்லி
பந்த ஆறுக்கு அடிச்சாலும்
கைய கொட்டி நாம சிரிச்சிருக்கோம்
சண்ட போட முடி புடிச்சிருக்கோம் -
சாயங்காலம் ஆவும் சனபொழுதுல - போட்ட
சண்ட எல்லாமே மறந்துருப்போம்

நண்பா!
நாம கிடந்திருந்த கருப்பபையி வேற-என்ன
கண்டதுமே உன் ஆத்தா போட்டு வப்பா சோற
தின்னுப்பான்னு சொல்லி வப்பா என் பசி தீர -நீ
எனக்காக எதுத்துடுவ தான் பொறந்த ஊர

நண்பா!
நான் தோந்து நிக்கயில தோள் கொடுத்த
இப்ப செயிச்சிதான்புட்டன்னு நீ சிரிச்ச- நீ
எனக்காக அலைஞ்சிருக்க கால் வலிக்க - நான்
காத்திருக்கேன் உனக்காக உயிர் துறக்க

எத்தனயோ ஒறவு எனக்கு இருந்தாலும் - நண்பா
ஒன்னோட ஒறவு அத பொறந்தள்ளும் - நான்
தள்ளாடி நிக்கிற காலத்திலும் - நீ
இல்லாத நாளெல்லாம் முள்ளாவும்

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (28-Jan-15, 8:39 am)
பார்வை : 301

மேலே