பேருந்தும் நானும்

பேருந்தும் நானும்

பேருந்தே என்னை நீ ஏற்றி செல்கிறாய்
வாழ்வே நீ என்னை கூட்டி போகிறாய்

பயணங்கள் பேருந்தில் பழக்கப்பட்டன
துயரங்கள் வாழ்வில் செதுக்கிவைப்பன

நீ தேடும் வழியை
உணர நேரம் ஆகலாம்

விழி காட்டும் பாதையை
நீ தீர்மானிக்கலாம்

இருக்கை கிடைக்க நேரம் ஆகலாம்
வாழ்வை வெல்ல துன்பம் எதிர்கொள்ளலாம்

பயணத்தின் முடிவை தீர்மானிப்பதும் இல்லை
துயரத்தின் பங்கை மறந்துபோவதும் இல்லை

முடிவு உள்ளது

நம் உளறல்கள் வார்த்தை ஆனது

நம் பயணங்கள் ?

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-Jan-15, 12:42 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : perunthum naanum
பார்வை : 399

மேலே