உன் பெயரை சொல்

என்னோடு பயணித்த
அதன் பெயரைக் கேட்டேன்..
இனக்கவர்ச்சி என்று சொல்லி சிரித்தது..
கொஞ்ச நாள் கழித்து பார்த்த போது
தன் பெயர் காதல் என்றது ..
கட்டி அணைத்த போது..
இது காமம் என்றது..
அக்கறை கொண்ட போது
பாசம் என்றது..அன்பு தந்தது..
காதலானது..அதுவே
காதலானது..!
..

எழுதியவர் : கருணா (30-Jan-15, 9:22 am)
Tanglish : un peyarai soll
பார்வை : 154

மேலே