மீண்டும் மழலை
பரிசுத்தமாய் மண்ணில்
சொட்டு சொட்டாய் விழும்போது
அந்த மண்ணின் மனத்தால்
மனதை இழுக்கிறாய்....
குட்டையாக தேங்கும்போது
தவளைகளின் கூடாரமாகிறாய்..
குளமாக மாறும்போது
அனைவரின் சோம்பல் நீக்கி
இதம் அளிக்கிறாய்...
ஆறாக ஓடி கடலில் கலக்கும் போது
உப்பாக மாறி அனைவருக்கும்
விருந்தின் சுவை கூட்டுகிறாய்....
ஒவ்வொரு முறையும் உன்னை
தொட்டு தொட்டு விளையாடும்போதும்
மீண்டும் மழலையாகிறேன் தண்ணீரே....