தரமிக்க தவறுகள் - இராஜ்குமார்

தரமிக்க தவறுகள்
~~~~~~~~~~~

தினசரித் திட்டத்தில்
தெருக்களின் அசுத்தமே
அறிவாளியின் அறிவுகளாம் ..

நாகரீகச் சிந்தனையில்
இயற்கையை அழிப்பதே
அனைவரின் அம்சமாம் ..

அமைதியான ஊர்வலத்தில்
சுயநலத்தை வளர்த்தலே
தலைவனின் கொள்கையாம் ....

தவறினைத் தயாரித்து
தடத்தினில் விதைத்தலே
தரமிக்க அரசியலாம் ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (30-Jan-15, 12:00 pm)
பார்வை : 118

மேலே