நீரின்றி அமையாது உலகு

ஏரியைப் பற்றிக்
கவிதையெழுத
உட்கார்ந்தேன் ......
கற்பனை
வறண்டு போனது !

======================

ஆறு வரைந்து
தரச்சொன்னான்,
ஆறாம் வகுப்பு
மாணவன் !
மணல் அள்ளும்
லாரிகளும்,
கிரிக்கெட் விளையாடும்
சிறுவர்களும்,
ஓரமாய்
சிறுநீர் கழிக்கும்
குடிமகனும்,
என
நீரில்லாமல்
வரைந்து கொடுத்தேன் !
முதல் பரிசு
கிடைத்ததாம் !

======================.

பார்த்துக்கொண்டேயிருங்கள் ........
இன்னுங்கொஞ்ச நாளில்
நாம் பார்த்து
அதிசயிக்க
டிஸ்கவரி சேனலில்
மரமும் ...........

======================

பக்கத்து வீட்டுக்காரனிடம்
குடை
இரவல் வாங்கினதை
நானும்
மறந்து விட்டேன்,
அவனும்
மறந்து விட்டான்,
மழையும்
மறந்து விட்டது !

எழுதியவர் : குருச்சந்திரன் (31-Jan-15, 6:10 am)
பார்வை : 540

மேலே