நதியே ரதியே

நதியே ; ரதியே

நதியிலே நனைந்திடும் ரதியே, உன்
காலிலே கொலுசு அணிவித்தது யாரோ?
ஜதிப்பாடும் பாத்தத்தாலே,
குயிற்பாட்டும் மறந்திடுதே... பெண்

குலமே, நீ
குமரியாய் ஆனாயே,
குதுகலமாய் கொண்டாடிட,
குன்றிலும் நீந்திட்டாயே,
குலமகள் வருகைக்கு
குங்கும்மிட்டு கொண்டாடிட வா (?) ....

முத்துக்கள் புதைந்து
மூச்சுவிடும் முன்பே,
மூச்சிரைத்து நிற்பது போல்
சொத்துக்கள் சோகங்கள் யாவையும், உன்
சூச்சமங் கொண்டு எதிர் வரும்,
சூழ்ச்சிகளை தகர்த் தெரிந்திடுவாயே...

அமைதி கடலே நீ,
அலையாக வந்து,
ஆக்ரோசமாய் நின்றாயே, உன்
ஆத்திரம் தீர ஆழ்கடலிலே
ஆடினாயோ ?

தண்ணீர் குடத்தில் சுமந்த
உயிரை ,
தண்ணீர் கடலில் கலந்திடவும்
உரைத்தாயோ ?

கண்ணில் கனவைச் சுமந்து,
கண்ணீர் மல்கி நின்றாயே... இழைக்கும்
கொடுமை தனை பொறுக்காது ,
பொங்கி எழுந்து வா பெண்ணே.....

ஆக்கத் தெரிந்தவளே , உனக்கு
அழிக்கவும் தெரியுமடி, பிறர்
சோகத்தைப் போக்கிட ,
ஆழிப் பேரலையாய் வா பெண்ணே...

உன்னிலே பல உயிர் வாழ்ந்திட,
இடம் கொடுத்தவளும் நீயே..
மண்ணிலே பல உயிர் வாழ்த்திட,
சுகம் கண்டவளும் நீயே...

நதியிலே,
நடனமாடிடும் நறுமுகையே,
நீ(ர்) வாழிய வாழியவே.....

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (31-Jan-15, 7:33 am)
சேர்த்தது : ஜனனி ராஜாராம்
பார்வை : 80

மேலே