ஆகாசவாணியே

ஆகாசவாணியே.....


ஆகாச வாணியே,
ஆகாச கங்கையே, நீ
ஆயிரம் விண்மீனை
ஆயுதமாய் கொண்டவளே...

காலையில் கதிரவனுடன்
காட்சியளிப்பவளே,
மாலையில் சந்திரனுடன்
குளிர்க்காய்பவளே,

நீல வானமும்
வெண்ணிற மேகமும்
ஆடையாய் நெய்தவளே,
நீ சேலையுடுத்தி
செல்லமாய் நடந்து செல்கிறாயே...

நிலாமுகம் கொண்டவளே, நீ
மேகங்கள் ஊடே
நாணிக் கோணி நிற்கிறாயே...
நட்சத்திரக் கூட்டம் பெண் பார்க்க
வந்ததோ...

பஞ்ச போன்ற மேனியவளே,
நஞ்சு கலக்கா தேனமுதே,
கார் முகிலென்ன உன் மனமா?
காயமுற்றதனால் அழுகிறதே...

என்ன மாயமடி பெண்ணே,
அன்ன நடைதான் போடுகிறாயே,
பரந்த உனது உள்ள உலகுக்கு,
பாதச் சுவடை பதித்துச் சென்றதாரோ...

வான ராணியே,
தூவானம் எதற்கடி?
சிணுங்கி நிற்கிறாயே, உனை
சிதற செய்தது யாரடி ?

வில் விழியாளே,
வானவில் தொடுகிறாயே,
வண்ண சேலைக்காரியே, உன்
விழியாலே அம்பெய்கிறாயே...

அதிசயமே, உனை
வியந்திட வேறெதுவுமில்லையே, உன்
ஆதங்கத்தை இடி மின்னலாய்,
ஆரோகணங் கொண்டு எழுந்திடுவாயே...

காயம் ஆற்றிடும்
ஆகாயமே, நீ என்றும்
ஆனந்த அடை மழையே...

எழுதியவர் : (31-Jan-15, 7:38 am)
பார்வை : 61

மேலே