இன்றைய அவமானம்

அந்த
ரயில்பாதை ஓரத்து
யானைக்கால் நோய்கொண்ட
வயதான யாசகன்
வருவோர் போவோரிடம்
பாத்திரம் ஏந்தினாலும்

எனை கண்டதும்
நீட்டியக் கையை கீழிறக்கிவிட்டு
திருப்பிக்கொள்கிறான் முகத்தை....

அதற்காக
நான் வெட்கப்படுவதாய் இல்லை
வெட்கப்படுவதாய் இருந்தால் - அவனை
அன்றாடம் அங்கே கிடத்திவிட்டு
வசூலிக்க வரும் அந்த ஆண்மகன்
வெட்கப்படட்டும்....

எழுதியவர் : யாழ்மொழி (31-Jan-15, 12:05 pm)
Tanglish : indraiya avamanam
பார்வை : 441

மேலே