ஆண்களே கற்பு உமக்குமுண்டு

..."" ஆண்களே கற்பு உமக்குமுண்டு""...

கவிதைக்குள் சமூக
சித்தாந்தம் இனிப்பு தடவிய
கசக்கும் மருந்து கேட்க
இனிமை சுவைக்க கடினம்
சொல்லாலொரு சாட்டையடி
தலை பம்பரமென சற்றே
சுழலத்தானே செய்யும் !!!

இலக்கியம் சொல்லித்தந்த
கதை கொஞ்சும் மாதவியின்
கொலுசொலியில் மனதோடு
தன் மதியையும் மண்ணோடு
பொருளும்மிழந்து மானம்கெட்டே
கண்ணகியின் கோவலன்
கேவலனாகிபோனானே !!!

இதையறிந்தும் இடறுகள்
தெரிந்தும் இன்பம் இன்பமென
நாடி முறுக்கேற நல்லவை
கெட்டவையும் நீ மறந்து
செய்வது அறிந்தும் நீயிங்கு
பெருமையாய் தாலியின்
வேலிதாண்டி வெள்ளா(ண்)மை !!!

கட்டியவள் கனிவாகவே
இருந்திட அவளின் கட்டில்
சுகம்போதாதென்று ஆணென்ற
ஆணவத்தை ஆட்சியேறி
உன் பணம் பெருக்க தன்
பாதைகள் மாற்றி பரத்தையின்
பின்னாலுன் பயணம் !!!

நாடி தளர்ந்துவிட்டால்
உன் மேனி சிறுத்துவிடும்
இல்லாத நோய்களெல்லாம்
சொல்லாமல் சேர்ந்துவரும்
வேண்டாமதை நீ விட்டுவிடு
மணந்தவள் மனம் சேர்ந்தே
இல்லறத்தில் நீ மலர்ந்துவிடு !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (31-Jan-15, 12:23 pm)
பார்வை : 484

மேலே