செப்பலோசை வெண்பாக்கள்--
மந்திரங்கள் ஒன்றுமில்லை மாயங்கள் தானுமில்லை;
தந்திரங்கள் ஏதுமில்லை; தன்போக்கில் -எந்த,நாளும்
முன்னிருக்கும் மேல்வானை மூழ்கடிக்கும் வண்ணத்தால்
என்னென்ன வோ?செய்வ தார்?
கற்றதுவோ ஏகமெனக் காட்டுவற் கேதுமிலை!
பெற்றதமிழ் என்பிறப்பால் பெற்றதுவே! – உற்ற,இந்த
நன்னிலையோ நற்பண்பு நண்பரினால்! வேறிங்கே
என்னிலையில் இல்லை,உயர் வு!
காய்ச்சீரினால் புனையப்பட்ட வெண்பாக்கள் இவை ;என்னுடைய பழைய பதிவுகளிலிருந்து வேறு சில வெண்பாக்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
விரைவில் இதனுடன் இணைத்துத் தருகிறேன்--பிறருக்காக...இதைப் பற்றிய மேலும் சில விவரங்களை மருத்துவர் கன்னியப்பன் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
எசேக்கியல்