யாரோ அவன்

சாலையில் போகும்போது , கடந்து நிற்கையிலே...
சாதுவை போல் இருந்து, என்னை இன்பத்தில்
சாகடிக்க போகும் உன்னை தினம்தினம்
சாலை முழுவதும் பார்க்கிறேன், முகம் தெரியாததால் கண்மூடி...

கருப்போ, சிவப்போ தெரியாது எனக்கு
கனவில் அடிக்கடி முகம் தெரியாத நீயடா...
கண்ணுக்குள் என்னை நீயும், மணவறையில் நாமும்
கருவுக்குள் உன்னை நானும் சுமக்கும் நாள் எங்கே?

என் பெண்மையின் உயிர்யென்று, உயிர்பிக்கும்...
என்னையே உன்னில் தொலைக்க நீயெங்கே...
என் நாளும் என்னை மறக்காமல், எனக்கே
எனக்காக பிறந்தவனே நீயெங்கே?

தெரியாத வெட்கம் தெரியவைக்க வருபவனே...
தெரியாத பலவற்றை சொல்லி தர வருபவன இதுவரை
தொலையாத என்னை முற்றிலும் உன்னில்
தொலைக்க தொடங்கும் நாள் எதுவோ?....

பெண்மையை அறிய துடித்து, என்னில் நீ
பெண்மையை தேடி தொலைவது எப்பொழுது?
பெண்மையை புரியாமல் குழம்பிகொண்டு இருக்கும்...
பெருங் கவி கூட்டத்தில் நீ சேருவது எப்பொழுது?

கனவில் தோன்றிய என் காதலனே,
கண்மூடி நாம் கண்ட் காதல் போதும்...
கருவறை உயிரில் நாம் பிறப்போம் மீண்டும், தேடி
கரம் பிடிக்கயென்று வருவாய் நாம் இணைய?

எழுதியவர் : Subha (31-Jan-15, 1:01 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : yaro avan
பார்வை : 101

மேலே