கடைசி ஆசை
பிணமான உடலுக்கு
பிணமான பின்னும் வலிக்கிறது...
பிணமாக காரணமானவனை நினைத்து...
ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்கிறேன்...
ஒரு நாளாவது என்னை, இல்லை
ஒரு நொடியாவது நினைக்கிறாயா....
எப்பொழும் உன்னை நினைத்து வாழ்கிறேன்..
என்னை பிரிந்தபின் உன் நினைவில் வாழ்கிறேன்..
என்னை எப்போதாவது நினைக்கிறாயா....
நீ அணிந்த சட்டைபோல் வேறுயார் அணிந்தாலும்..
நீயாக இருக்க மாட்டாயாயெனா, உன்
நினைவை சுமந்து கொண்டு ஏங்குகிறேன்...
உன்னுடன் நடக்கும் போது
உள்ளங்கை இணைத்து நடந்து
உலகம் மறக்க நினைத்த நாள் அதிகம்...
கனவுகள் மட்டுமே எஞ்சிய வாழ்வில்
கலையாமல் நான் கண்ட கனவுகள்
கண்களில் கண்ணீராய் மட்டும்...
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் எனக்கு
ஆண்டுகள் முழுவதும் தந்தவனே
ஆசைகாட்டி என்னை அழித்து விட்டாயே...
மரணம் கூட நம்மை பிரிக்காதுயென்றாய்...
மரணத்தை விட அதிகமாக வலிக்கிறது...
மணக்கோலத்தில் நீ இருப்பதை நினைத்து....
எனக்காகவே மட்டும் நீ யென்றாய்...
எங்கோயே என்னை விட்டு, ஏமாற்றி
என்னை உயிரோடு கல்லறையாக்கி விட்டாய்...
கல்லறை கூட கண்ணீர் சிந்தும்
கனவுகள் இல்லாத உள்ளத்தில்...
கனவு சுமக்கவைத்து விட்டாய் கல்லறையிலும்...
கடைசியாக ஒரு வேண்டுகோள்...
கல்யாண கோலத்திற்கு என்னை ஏமாற்றி முந்தியவனே..
கல்லறையிலும் முந்தி விடாதே...
உனக்காக நான் கல்லறைக்கு போகும்போது...
உண்மையாய் உள்ளத்தில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் ...
உன்னால் நான் அடைந்த பிணவாழ்வுக்கு சிந்து...
விழியில் தூக்கம் குறைந்து, என்
விழியில் ஏக்கம் மிகுந்து... உன்னால்
விழியை யாரும் அறியாத நீருற்று ஆக்கினாய்...
கல்லறைக்கு செல்லும் என்னை
கடைசி யாத்திரை வழி அனுப்ப..
கடைசியாய் வந்து வழி அனுப்புவாயா?
மணவாழ்வில் சேர முடியாத நான்...
மரணத்திற்கு பிறகாவது, அடுத்த ஜென்மம் இருந்தால்...
மணக்கோலத்தில் காத்திருக்கிறேன், உனக்காகவே...