எங்கிருந்தோ ஒரு அழு குரல்

பத்து மாதம் காத்திருந்து
பக்குவமாய் உன்னை பெற்றெடுத்தேன்
பாவி மக நீ வந்து
பெண்ணா பிறந்திட்டியே!

பெண் குழந்தைய மத்தவங்க
மண் கொடுத்து கொண்டப்போ
பாவி என்னால
உன்ன கொல்ல மனசில்லையே!

தினமும் குடிச்சிபுட்டு
உங்கப்பா வருவாரு
உன்ன கொல்ல சொல்லி
வார்த்தையல சீறுவாறு!

அவர் உன்ன கொல்ல துணிச்சப்போ
அவர கீழ தள்ளுனேனே
உன்ன நெஞ்சோடு அணைச்சு
அள்ளுநேனே!

பத்து பாத்திரம் தெய்ச்சுதானே
உன்ன பள்ளிகூடம் அனுப்பி வச்சேன்
தினம் குடிச்சிபுட்டு வந்தடிக்கும்
வேதனையே அனுபவிச்சேன்!

காசை எல்லாம் கள்ளா குடிச்சதாலே
பொங்கலுக்கும்
சோறு பொங்கல
மனசு தாங்கலே!

பன்னிரண்டு வயசுல நீ வயசுக்கு வந்தாய்யடி
என் கண்ணிரெண்டும் நெருப்பால வெந்ததடி
மனசு நொந்ததடி!

உன் சடங்க செய்யத்தானே
கொஞ்ச பணத்த புரட்டுனேன்
படு பாவி உங்கப்பன்
அதை மிரட்டித்தான் கொண்டு போனாரே !

உன் சடங்க செய்ய கூட
இந்த பாவிக்கு வழிஇல்ல
வலிக்கு மருந்தாய்
வழியேதும் இல்ல!

உன்னை கல்யாணம் செஞ்சு வைக்க
நன்செய் புன்செய் கேட்பாங்களே
நாதியற்று கிடக்கும் நான்
உன்னை எப்படி கரை ஏற்ற போறேனோ???????

( தாயின் வறுமை நிலையையும் பொறுப்பற்ற கணவனையும் வயதுக்கு வந்த மகளின் அவல நிலையையும் இது பறை சாற்றுகிறது)

எழுதியவர் : சபியுல்லாஹ் எம்.பி.எ (31-Jan-15, 3:17 pm)
பார்வை : 201

மேலே