பரிணாம வளர்ச்சி
அந்தக் குரங்குகள்
ஒன்றாகவே எங்கும் சென்றன..
ஒன்றிற்கு ஆபத்து என்றால்
ஓடோடி உதவிக்கு சென்றன..
காலம் கடந்தது..
லட்சக் கணக்கில்..
பரிணாம மாற்றத்தில்..
அவைகளில் சில
மனிதக் குரங்குகளாய்..
பின்..
மனிதர்களாய்
மாறின ..
காலம் கடந்தது..
பரிணாம மாற்றத்தில்..
இன்னும் மாற்றங்கள் ..
மூளை வளர்ச்சி..
விஞ்ஞானம்..
அரசியல்..ஆளுமை..
கலாசாரம் ..கலைகள்..
எவ்வளவு மாற்றங்கள்..
கூடவே ..
காட்டி கொடுப்பதும்..
கவிழ்த்து ரசிப்பதும்..
பாதகங்கள் செய்வதும்
ஏதாவது ஒரு பெயரில்
ஒன்றை ஒன்று அழித்துக் கொள்வதும்
ஆக ..
எவ்வளவு மாற்றங்கள்..!
மனிதத்தை மட்டும்
வைத்துக் கொண்டு ..
கீழ் நோக்கிய வளர்ச்சிகள்
அடைய முடியாதவை .
மனிதக் குரங்குகளாய்..
குரங்குகளாய்..
பரிணாமத்தால்
பரிகசிக்கப்பட்டு
வேடிக்கை பொருளாயின !