காதல் வெண்பா பா பூக்கிறது 3

காதல் அந்தாதி 3ன் வெண்பா வடிவம்

காதலே கவிதையில் வரும் தேவதையே
பாதையில் நின்றவனைப் பார்வையால் வென்றாய்
ஆதலினால் அந்திப்பொழுது நமக்கு என்றாய்
பாதை நீ விரித்த மலர்வீதி மானே !

திருந்திய வெண்பா வடிவம் :

காதல் கவிதையில் வந்திடும் தேவதை
பாதையில் நின்றவனைப் பார்வையில் வென்றனை
ஆதலினால் மாலை நமக்கே என்றனை
பாதை மலரேயுன் வீதி .
----------------------------------------------------------------------------------------------------------------------
முற்றிலும் திருந்திய தூய வெண்பா வடிவம் :
===========================================

காதல் கவிதையில் வந்திடும் தேவதை
பாதையில் நின்றவனைப் பார்வையில் வென்றனை
ஆதலினால் மாலை நமக்குத்தான் என்றனை
பாதை மலருன் தெரு . .
----------------------------------------------------------------------------------------------------------------------

1.வெண்பாவில் தேர்ந்தவர் பிழை சுட்டிக் காட்டலாம்.
தளை தட்டி நின்றால் வெண்பா படகு தரைதட்டி நிற்கும்.
காலங்கள் கடந்து ஔவையின் வெண்பா படகு நம் நெஞ்சில் இன்றும்
நீந்தி வருவதற்கு காரணம் தேர்ந்த இனிய எளிய சொற்களால் அவர்
யாத்த உன்னதமான வெண்பாக்கள் .

2. இளங்கவி விவேக் பாரதி சுட்டிக் காட்டியபடி தளை தட்டிய சீர்கள்
மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன . . காண்க
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-15, 7:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே