சிறுவர் பாடல் _பண்பு பழகு

பண்பாய் பழக கற்றுகொள்
பாசமாய் நடக்க பழகிக்கொள்

ஒழுக்கமதனை கைக்கொண்டு
ஓங்கி உயர்த்திடு என் தம்பி

கல்வியும் உனது கண்தானே
காலமும் உன் துணை அதுவே

நேரத்தை நீயும் மதித்திடுவாய்
நெஞ்சத்தில் அதனை உறுதியும் செய்வாய்

கோபத்தை அறவே தவிர்த்துவிட்டால்
கோட்டையும் உனக்கு சொந்தமாகும்

பெரியோர் சொல்லை பின்பற்று
பாரினில் புகழை நிலைநாட்டு !!!

எழுதியவர் : வீ.ஆர்.கே. (1-Feb-15, 10:20 pm)
பார்வை : 52

மேலே