சிறுவர் பாடல் _மரம் வளர்ப்போம்

இயற்கை அன்னையின் கொடைகளாம்
தாவர இனக்கனில் வகை பலவாம்

வீட்டு தோட்டத்தில் செடிகொடிகள்
வீதியெங்கும் மர வகைகள்

நாடும் செழித்திட மழை வேண்டும்
மழையும் பெய்திட மரம் வேண்டும்

நல்ல காற்றை சுவாசிக்க
நமக்கு வேண்டுமே பசுமரம்

வீடுதோறும் தென்னம் பிள்ளை
பயன் பல தரும் பிள்ளை

அள்ளித்தரும் பலன்களை மரம்தாமே
அவைகளால் வளம்பெறும் சமுகமே

எழுதியவர் : வீ.ஆர்.கே. (1-Feb-15, 10:30 pm)
பார்வை : 91

மேலே