உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய் 1

வாசம் வீசும் பல வண்ண பூக்கள் அவள் தீண்டலுக்காகபூத்திருக்க, குளுகுளு தென்றல் காற்று தனது தோழியின்தழுவலுக்காக காத்திருக்க, அவைகளை ஏமாற்றாமல் சாதாரண காட்டன்புடவையில் அழகாக வந்து கொண்டிருந்தாள் அவள்....வீட்டின் முன் பக்கம் இருந்த தோட்டத்திற்கு...

மென்மையான விரல்களால் செடிக்கும்வலிக்காது மலரினைப்பறித்தவள், தன்னைத்தொட்டுச்செல்லும் பனிகாற்றை கண் மூடி அனுபவித்தாள் இதழ்களில்பூத்த புன்னகையோடு...புடவையை மேலே தூக்கி சொறுகிக்கொண்டு, வாசல் தெளித்து கோலம் இட்டவள், பறித்தமலர்களை எடுத்துக்கொண்டு வீட்டினுள்நுழையவும், அவள் கணவன் அன்சுதன்உள்ளிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது...அவன் எதிரே வரவும், அவள் மௌனமாக நின்றாள்... மெல்ல அவளைஅவன் நெருங்க, அவள் பின் நகர்ந்தாள்... அவளருகில் சென்றவன், அவளின் பின்னே எட்டிப்பார்த்து கோலம் எல்லாம் போட்டாச்சா?... ஹ்ம்ம்... என்றபடி அவளைப் பார்க்க, அவள் அமைதியாக இருந்தாள்...பேசமாட்டாளே.... என்று எண்ணியவன், பூ சாமிக்கா?... என்று கேட்க, அவள் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.. அவள் அப்படி தலையாட்டும்போதுஅவள் காதுகளில் தொங்கிக்கொண்டிருந்த ஜிமிக்கி நர்த்தனம் ஆட, காற்றின் மொழிக்கு பயந்து அவன் கன்னங்களைசரணமடைந்தகற்றைக்கூந்தல் அவனை ஏதோ செய்ய, அவன் பார்வை அவள் கழுத்தில் படிந்தது...அவன் கட்டிய தாலி... அதன் மஞ்சள் மணம் கூட இன்னும் அப்படியே... பின் தினமும் அவள்மஞ்சள் தேய்த்து குளித்தால் மஞ்சளாக இல்லாமல் பச்சையாகவாஇருக்கும் என்று அவன் மனம் கேலி பண்ண, எழுந்த சிறு குறுநகையை உதட்டில் பரவவிட்டவன், அவளை இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தான்... மேலிருந்து கீழ் வரை...அவன் பார்வையில் சற்றே தடுமாறியவள், அதை அவனிடம் காட்டாதவாறு நின்றாள்... ரொம்ப அழகாஇருக்குற... நீ கட்டியிருக்குறது சாதாரண புடவை தான்... ஆனா, அதையே எவ்வளவு அழகாக்கமுடியுமோ அப்படி ஆக்கிட்ட... என்று சொல்ல, அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை...ஹ்ம்ம்... பூஜையறைக்கு தானே அடுத்து... என்றவன் லேசாக வழி விட,

அவள் ஹ்ம்ம்... என்றவாறு அவன் மேல் இடிக்காமல் செல்ல,
பொண்டாட்டி என்று அழைத்தான் அவளை...அவள் என்ன என்று திரும்பி பார்க்க, உன்னோட வெண் பஞ்சு பாதங்களுக்கு கொலுசு ரொம்ப அழகா இருக்கு... என்றதும், சட்டென்று அவள் தன் பாதத்தை பார்க்க, இழுத்து செறுகியிருந்தசேலையுடன், தான் இன்னும் இருப்பதை உணர்ந்து பட்டென்றுபுடவையை திரும்பி நின்று சரி செய்தாள்... எதிர்பாராமல் தோன்றியவெட்கத்துடன்...என்னைப் பார்த்தே வெட்கப்படலாம்... நான் எதும் சொல்லமாட்டேன் என்று அவன் கேலி செய்ய... அவள் மீண்டும் மௌனமாகி விட, உன் வெட்கமும் அழகா இருக்கு... உன் காலின்மச்சமும் தான்... என்றதும் அவள் அதற்கும் மேல் அங்கே நிற்கவில்லை...அவள் செல்வதையே இமை அசைக்காதுபார்த்திருந்தவன் அவள் தன் வாழ்வில் வந்த நாளை நினைவு கூர்ந்தான்...

பெற்றோர்களின்வற்புறுத்தலின் பேரில் அவளை பெண் பார்க்க சென்றான்... ஏனோ பார்த்த உடனே இவள் தான் தனக்கானவள் என்ற எண்ணம் அவனின் மனதில் வேரூன்றியது..ஆனால், அவள் இவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை...சரி வெட்கம் போலும் என்றெண்ணிக்கொண்டவன ்அவளையும் திருமணம் வரை தொந்தரவு செய்யவில்லை... அதன் பின் அனைத்தும் மின்னல் வேகத்தில்நடக்க, நிறைந்த சபையில் பெரியோர்களின்ஆசியுடன் அவளை அக்னி சாட்சியாக கரம் பிடித்தான்...

அன்றிரவு தனதறைக்குள ்நுழைந்தவனுக்கோ பேரதிர்ச்சி... அலங்கரிக்கப்பட்டமெத்தையில
சிறு பிள்ளை போல் உறங்கிக்கொண்டிருந்தாள் அவனது மனைவி ஸ்வரமேகா... கிட்டநின்று பார்த்த போது தான் புரிந்தது அவள் உண்மையில் உறங்கவில்லை... உறங்குவதை போல் நடித்துக்கொண்டிருந்தாள் என்பது... கண்களை இறுக மூடி, கைகால்களை சுருக்கி அவள் படுத்திருந்த தோற்றம் அவனுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது... அசையாமல் சிறிது நேரம் நின்று அவளையேபார்த்திருந்தவனின் மனதில் காதலுக்கான ஆரம்பம் உண்டானது... குட்நைட் ஸ்வீட் பொண்டாட்டி... என்று மெல்ல சொன்னவன், அவளுக்கு ஓர் போர்வையை எடுத்து போர்த்திவிட்டுமெத்தையின் அடுத்த ஓரத்தில் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்...அதன் பின் ஒரு வாரம் வரை, மறுவீடு, அது இது என்று பகல் பொழுது கழிந்து விட்டாலும், இரவில் அவள் அதே முறையைகையாண்டாள்... அவனின்தாயும்தந்தையும் சில நாட்கள் அவனுடன் இருந்துவிட்டு ஊர் சென்ற பின்பு, ஒரு நாள், வழக்கம் போல் அவனுக்கு முன்பு அறைக்குள் வந்து உறங்கும் எண்ணத்துடன் வந்தவளை வரவேற்றான் அவன் கை தட்டி....

அதிர்ச்சி தான்... ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவன் அங்கு இருப்பது போல் கூட எண்ணாமல் அவனைக் கடந்து செல்ல அவள்முயன்றபோது, உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்.... அவள் என்ன என்ற பாவனையில் விழி உயர்த்த,நான் உன் கணவன், நீ என் மனைவி... அது உனக்கு நியாபகம்இருக்கா?...அவள் ஹ்ம்ம்ம் என்றாள்..ஆனால்... எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை.... என்றவனைகேள்வியாய் அவள் பார்க்க...என்ன பார்க்குற?... நமக்கு கல்யாணம் முடிந்து சரியா 25 நாள் ஆச்சு.... ஆனாஇப்போவரை நீ எங்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினது இல்லை... இப்போசொன்னியே ஒரு ஹ்ம்ம்... அது தான் நீ எங்கிட்ட பேசின முதல் வார்த்தை...நீ பேசிட்டன்னு நான் சந்தோஷப்படுறதாஇல்ல, இப்படி உன்னை கேள்வி கேட்டு பேச வைக்குறதுக்காக வருத்தப்படுறதா?.... எதுவும் புரியலைடா... உனக்கு எங்கிட்ட பேச, சொல்ல என்ன தயக்கம்டா?..டெய்லி நீ தூங்குறது போல நடிக்குறது எனக்கு தெரியாதுன்னு நீ நினைக்கிறியா?... என்று அவன் கேட்டதும்,அவளிடம் இருந்து பதில் என்ன அசைவு கூட இல்லை...

பயத்தில் அவள் முகம் வெளிற, அதைப்பார்த்தவனுக்கோ, மனம் வலித்தது...

உன்னைப் பார்த்த உடன் எனக்கு காதல் வரவில்லை... அதை நானே ஒத்துக்கொள்கிறேன்... எனக்கு உன்னைப்பிடித்திருந்தது... மேலும், நீ தான் இந்த ஜென்மத்தில் என் மனைவின்னுஎனக்குள்ள எதோதோணுச்சு... அதனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிணேன்...எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி போனில் பேசுற மாதிரி எனக்கு உங்கிட்டபேசணும்னு தோணிருக்கு... ஆனா, அன்னைக்கு நீ அத்தனை பேர் மத்தியில் என்னைப் பார்க்கவே இல்லை... உனக்கு வெட்கம்னுநினைச்சேன்... சரி கல்யாணத்துக்குப் பின்னாடி எப்படியும் இரண்டு பேரும் மட்டும் தானே வாழ்க்கை முழுதும் பேசிட்டிருப்போம்னுஉங்கிட்ட போனில் பேசாமலேவிட்டுட்டேன்... இப்போதோணுது... உங்கிட்ட அப்போவே பேசியிருக்கலாம்னு... என்றவன் நிதானமாக அவளைப் பார்க்க...

அவளோநிலத்தைப் பார்த்தாள்...

என்னைப் பார்த்து கூடபேசமாட்டியாடா?... என்று அவன் கேட்க... அவன் குரல் தொனித்த அந்த விதம் அவளை வாய்திறக்க வைத்தது...

மன்னிச்சிடுங்க... நான்... நா.....ன்... உ....ங்......க......ளு.....க்....கு
பொ....ரு....த்....த....மி....ல்லை... என்று திக்கி திணறி அவள் சொல்லி முடித்த போது, அவள் குரலில் அவன் மயங்கி தான் போனான்... மயங்கியவன் அழகாக சிரித்தபடியே, ஓ... யார் சொன்னா அப்படி? என்று கேட்க....

நான் தான் சொல்லுறேன் என்றாள் அவள் நடுக்கத்துடன்....

எதுக்குடா பயம்?... நான் உன் கணவன்... உனக்கானவன்.... என்றவன் அவளருகில் நெருங்க,அவள் சட்டென்று பின்னடைந்தாள்... அவன் மேலும் முன்னேற,அவள், நான் உங்களுக்கு பொருத்தமில்லை... இல்லை... இல்லை.... என்றவள் உதடு துடிக்க அவனைப் பார்த்தாள்...

சொல்லு.... உன் மனசுலஇருக்குறது எதுவானாலும்சொல்லு... என்று அவன் பார்வை சொல்ல...

நான்.... நான்...
காத.....லி...ச்....சே....ன்........ ஒருத்தரை.... என்னாலஉங்ககூட வாழ முடியாது.... நான்.... உங்களுக்கு பொருத்தமில்லை.... என்றவள் முகம் மூடி சரிந்து அழுதாள்....

அவள் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கியவன்உள்ளம் அவளுக்காக மிக வருந்தியது...அவளருகில் அமர்ந்தான்... என்னாச்சுடா... சொல்லு.... எங்கிட்ட சொல்லலாம் என்றால்.... என்றகேள்வியுடன்அவன் பார்வை நிறுத்த... அவள் சொன்னாள்....

கல்லூரியில் படித்தபோது அவளுக்கு காதல் உண்டானது... அவனும் அவள் மேல் உயிராய் தான் இருந்தான்... நேரந்தவறாமல் நலம் விசாரிப்பதும்,
ஐ லவ்யூ சொல்லிக்கொள்வதுமாய ்இருந்தான்... ஆனால், அவன் அனைத்துமே காதலாக பார்த்தும்அவளின் காதலை புரிந்து கொள்ளாமல் போனான்... ஒரு கட்டத்தில், அவன் இதெல்லாம் சரி வராது... நீ நினைப்பதெல்லாம் நடக்காது... அதனால், நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கோ என்று சென்று விட்டான்... அவளுக்கோ பேரதிர்ச்சி... அவனிடம் பேச முயன்றபோது பேசாமல் தவிர்த்தான்... அதில் மனம் உடைந்து போனவள் அப்படியே பித்து பிடித்தவள் போல் இருந்தாள் இரண்டு வருடங்களாக... திடீரென்று ஒரு நாள், வீட்டில் திருமண பேச்சுஎடுத்தபோது செய்வதறியாது திகைத்தாள்... பெண் பார்க்கும் படலமும் நடந்து முடிந்த பின், அனைத்தும் தன் கை மீறி சென்றுவிட்டதைஉணர்ந்தவள் அமைதி என்னும் திரைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.... ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாய் இருந்தாள்... அது தான் கணவனுடன் ஆடிக்கொண்டிருக்கும் இந்த தாமரை இலை தண்ணீர் வாழ்க்கை....

தொடரும

எழுதியவர் : SATHEESH (2-Feb-15, 11:52 am)
பார்வை : 923

மேலே