புரியாத காதல் புள்ளிகள்
வலையின்
முள் அறுத்த
கீறல் முதலிடம்
தேடி முந்தி வரும்
ரத்தம் அவள்
காலடி சுற்றி வந்ததாலும்
அவள் எக்கி
நடக்கிறாள்
நீந்தி துடிக்கும்
என்னை
சிமிட்டி ரசிக்கிறாள்
நகத்தில்
பூக்கள் வளர்த்து
கொடுக்கிறேன்
வாசமில்லாத
பூக்களால்
உன் காதல்
செல்லாது என்கிறாள் .